பசும்பொன்:
முத்துராமலிங்கத் தேவர் உயிருடன்
இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க படை
ஒன்றை அனுப்பியிருந்திருப்பார் என்று கூறினார் மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ.ராமநாதபுரம் மாவட்டம்
பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில்
குருபூஜை 30-10-2011 அன்று சிறப்பாக நடந்தது. அதில் கலந்து
கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்
தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.மலர்
தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.மலர்
வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் வந்த
திரு.வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முத்துராமலிங்கத் தேவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால்,
ஈழத்தில் தமிழர்கள் படும் அவதியைக் கண்டு கொதித்து,
ஒரு தனிப்படையை அனுப்பி தமிழர்களைக் காத்திருப்பார்.
என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment